நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பேட்டை பகுதியில் ஷேக் மைதீன் என்பவர் வசித்து வந்தார். இவரும், இவருடைய நண்பர் முகமது ரியாஸ் என்பவரும் சேர்ந்து நேற்றிரவு பழையபேட்டை இணைப்பு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் நிலைதடுமாறி அவர்கள் கீழே விழுந்தனர்.
இதில் ஷேக் மைதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து காயமடைந்த முகமது ரியாசை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்