Categories
பல்சுவை

டூவீலர் லோன் வாங்குற ஐடியா இருக்கா?…. அப்போ இத கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…. அப்புறமா போங்க….!!!!

ஆட்டோமொபைல் தொழில்துறைக்கு 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் டூ வீலர்களின் விற்பனை அமோகமாக இருந்தது.

எஸ்பிஐ :-

பொதுத்துறை நிறுவனமான எஸ்பிஐ வங்கி தான் இரு சக்கர வாகனங்களுக்கு மிக குறைவான வட்டியில் கடன் வழங்குகிறது. அதாவது எஸ்பிஐ வங்கியில் 6.85 சதவீத வட்டியுடன் இரு சக்கர வாகனங்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இந்த வட்டியில் மூன்று ஆண்டுகள் தவணையில் ரூ.1 லட்சம் கடன் பெறும் போது ரூ.3,081 மாதாந்திர தவணை தொகையாக வசூலிக்கப்படுகிறது.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா :-

இந்த பட்டியலில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, எஸ்பிஐ வங்கிக்கு அடுத்தபடியாக உள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் இரு சக்கர வாகனங்களுக்கான கடன் தொகையை 7.25 சதவீத வட்டியில் பெற முடியும். ரூ.3,099 மாதாந்திர தவணை தொகை ஆகும்.

ஜம்மு & காஷ்மீர் வங்கி :-

மூன்று ஆண்டுகள் வரம்பில் ரூ.1 லட்சத்தை ஜம்மு & காஷ்மீர் வங்கியில் கடனாக பெற்றால் அதற்கான வட்டித் தொகை 8.45 சதவீதம்.

பஞ்சாப் நேஷனல் வங்கி :-

மற்ற நிதி நிறுவனங்களை விட குறைவான வட்டியில் இரு சக்கர வாகனங்களுக்கு கடன் வழங்குவதில் பொதுத்துறை வங்கிகள் தான் முன்னணியில் உள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 1 லட்சம் கடனுக்கு மாத தவணை ரூ. 3,171 என்ற வகையில் 8.8 சதவீத வட்டியுடன் வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுக்கப்படுகிறது.

ஆக்சிஸ் வங்கி :-

குறைந்த வட்டியில் இரு சக்கர வாகனங்களுக்கு கடன் வழங்கும் தனியார் வங்கிகளில் ஆக்சிஸ் வங்கி முதலிடத்தில் உள்ளது. ஆக்சிஸ் வங்கியில் ரூ.1 லட்சம் கடன் 9 சதவீத வட்டித் தொகையுடன் வழங்கப்படுகிறது என்றால் ரூ.3,180 மாதாந்திர தவணை தொகை ஆகும். இதே வட்டித்தொகை அளவில் கனரா வங்கியிலும் கடன் வழங்கப்படுகிறது.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா :-

டூ வீலர்களுக்கு 10 சதவீதத்திற்கு குறைவான வட்டித் தொகையில் கடன் வழங்கும் நிதி அமைப்புகளின் பட்டியலில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா கடைசி இடத்தில் உள்ளது. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.1 லட்சம் கடனுக்கு ரூ.3,222 மாதாந்திர தவணை தொகை ஆகும்.

Categories

Tech |