அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக திபு நகரில் தீவிர டெங்கு காய்ச்சல் பரவல் ஏற்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தீவிர டெங்கு காய்ச்சல் பரவலால் தடுப்பு நடவடிக்கையாக திபு மாநகராட்சி வாரியம் மற்றும் திபு பெருநகர பகுதிக்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அங்கன்வாடி நிலையங்களில் உள்ள பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை அனைத்து கல்வி நிலையங்களுக்கும் ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி இன்று முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை இந்த பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.