Categories
தேசிய செய்திகள்

டெங்கு தடுப்பு…. தமிழகம் உட்பட 9 மாவட்டங்களுக்கு வருகிறது மத்திய குழு!!

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு மத்திய குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநில மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். டெங்குவை தடுக்க அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. இந்நிலையில் தமிழ்நாடு, டெல்லி, ஹரியானா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட 9 மாநிலங்களில் ஆய்வு செய்வதற்கு மத்திய சுகாதாரக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 1,16,099 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |