Categories
அரசியல்

டெட் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு… அரசு அறிவித்த சூப்பர் அறிவிப்பு…!!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட இருக்கிறது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகன் வெளியிட்டுள்ள  செய்தி குறிப்பில், விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்தில் செயல்பட்டுவரும், தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டித் தேர்வில் கொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசு பணிகளில் சேர்ந்திருக்கின்றனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், 09.04.2022 அன்று முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்படயிருக்கிறது.

இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடைய விரும்பும் நபர்கள், 08.04.2022 –க்குள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி பதிவு செய்துகொள்ளுமாறு கூறப்பட்டிருக்கிறது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த படித்த இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் அவர்கள் கூறியுள்ளார்.

Categories

Tech |