தமிழகத்தில் கடந்த 2011 முதல் 2021 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர்,சிவகங்கை மற்றும் கோவை மாவட்டங்களில் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில் அரசுக்கு 692 கோடி இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்ததாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டிருந்தது.அறப்போர் இயக்கத்தின் இந்த புகார் தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தி தருவதாக கூறி மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும் படி இ பி எஸ் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் இதுவரை விஜிலென்ஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என ஈபிஎஸ் தரப்பு கோரிக்கை வைத்திருந்தது . இந்நிலையில் இந்த கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது . இதன் மூலமாக இபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க தடை இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.