டெண்டர் முறைகேடு விவகாரத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான ஆதாரங்கள்திருடப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவிக்கிறார் என தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளை வர உள்ள நிலையில் மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்புடைய வழக்கில் எஸ்.பி.வேலுமணி எதிரான ஆதாரங்கள் வலுவாக இருப்பதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.