விரைவு பேருந்துகளில் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ளும் போது சாலையோரம் இருக்கும் உணவகங்களில் நிறுத்தப்படுவது வழக்கம். அரசு பேருந்துகளை உணவகங்களில் நிறுத்தம் செய்யும் ஒரு வருடத்திற்கு ஒருமுறை அதற்கான நிபந்தனைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும். மேலும் சைவ உணவு மட்டும் தான் தயார் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் சைவ உணவகங்களில் மட்டுமே அரசு பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்ற கட்டுப்பாட்டை போக்குவரத்து துறை நீக்கியுள்ளது. ஓட்டல் விண்ணப்பத்தில் சைவ உணவை தயாரிக்க வேண்டும் என இருந்ததால் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் புதிய நிபந்தனை நீக்கிய போக்குவரத்து கழகம் அரசு பஸ் ஓட்டலில் சைவ அசைவ உணவு தயாரிக்கலாம் என தெரிவித்துள்ளது.