Categories
மாநில செய்திகள்

டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் குடும்பத்திற்கு…. ரூ.10 லட்சம் நிதியுதவி…. முதல்-அமைச்சர் அறிவிப்பு….!!!!

மேகலாயாவில் கார் விபத்தில் பலியான தமிழக டென்னிஸ் வீரர் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேகலாயாவில் நடைபெற்ற 83வது சீனியர் தேசிய சாம்பியன் போட்டியில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு சார்பில் இளம் வீரரான தீனதயாளன் மற்றும் 3 வீரர்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து ஷில்லாங் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி மீது மோதியதில் தீனதயாளன் உயிரிழந்தார். மற்ற 3 வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவரது இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் செய்தியை வெளியிட்டார். தொடர்ந்து கார் விபத்தில் பலியான தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் நிதி வழங்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Categories

Tech |