Categories
உலக செய்திகள்

டென்னிஸ் வீராங்கனை உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை காமியுங்கள்…. விருப்பம் தெரிவித்த அமெரிக்கா….!!

சீன நாட்டின் முன்னாள் துணைப் பிரதமரின் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டை வைத்த முதலிலிருந்தே டென்னிஸ் வீராங்கனை மாயமானதையடுத்து தற்போது அமெரிக்கா அந்நாட்டை வலியுறுத்தி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

சீனாவில் வசித்துவந்த பெங்க் சூவாய் என்னும் பெண்மணி அந்நாட்டின் டென்னிஸ் வீராங்கனையாக திகழ்ந்துள்ளார். இதனையடுத்து டென்னிஸ் வீராங்கனையான சூவாய் அந்நாட்டின் முன்னாள் துணை பிரதமரின் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் முன்னாள் பிரதமரின் மீது டென்னிஸ் வீராங்கனையான சூவாய் பாலியல் ரீதியான குற்றச்சாட்டை முன்வைத்த முதலிலிருந்தே மாயமாகியுள்ளார். இந்நிலையில் அமெரிக்கா சீனாவிடம் தங்கள் நாட்டின் விருப்பத்தையும், கவலையும் தெரிவித்துள்ளது.

அதாவது சீனாவின் முன்னாள் துணை பிரதமரின் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டை முன்வைத்த டென்னிஸ் வீராங்கனை உயிரோடு இருப்பதற்கான ஆதாரத்தை சீனா வழங்க வேண்டும் என்ற விருப்பத்தை அமெரிக்கா சீனாவிடம் தெரிவித்துள்ளது. மேலும் சீனாவின் டென்னிஸ் வீராங்கனை மாயமானது தொடர்பான கவலையையும் அமெரிக்கா வெளிப்படுத்தியுள்ளது.

Categories

Tech |