Categories
உலக செய்திகள்

டென்மார்க்கில் மகிழ்ச்சியான செய்தி…. நீக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகள்..!!

டென்மார்க் அரசு ஐரோப்பிய நாடுகளில் முதன்முறையாக கொரோனா நோய் பரவல் கட்டுப்பாட்டு விதிமுறைகளை விலக்கிக் கொண்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரத்தில் கொரோனா நோய்தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.ஆனால் இந்த புதிய வகை ஓமைக்ரான் கொரோனாவால்   நோயாளிகளின்  உடல்நிலை அதிக அளவில் மோசமடையவில்லை என்பதால் மருத்துவமனைகளில் பணிச்சுமையும் குறைந்துள்ளது.

இந்நிலையில் இந்நோய் தொற்று சமூகத்தில் அச்சுறுத்தல் நிறைந்த நோயாக கருதப்பட தேவையில்லை என டென்மார்க் அரசு முடிவு செய்தது . இதனால் இந்நோய் பரவல் கட்டுப்பாட்டு விதிமுறைகள் அனைத்தும் நீக்கப்பட்டன.

Categories

Tech |