Categories
தேசிய செய்திகள்

டெபிட் கார்டு முறையில் புதிய மாற்றம்…. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு…!!

ஆட்டோ டெபிட் முறையில் புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ளது . இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஓடிடி தளங்கள் செல்போன் மற்றும் இதர பல சேவைகளுக்கு கார்ட்களை பயன்படுத்துகின்றனர். இதில் பெரும்பாலும் கார்டு தகவல்களை தந்துவிட்டால் மாதாமாதம் பணம் ஆட்டோமேட்டிக்காக எடுத்துக்கொள்ளப்படும். இந்நிலையில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ்வங்கி புதிய கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளது.

அதன்படி வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் ஓடிபி வழியாக அனுமதி கேட்கப்படும், வாடிக்கையாளர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே அந்த பணம் டெபிட் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.  இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையால் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் பில், மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம் போன்ற இதர பயன்பாட்டு, பில்களை நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் மாதிரியான ஓடிடி இயங்குதள கட்டணங்கள் மற்றும் ஊடகச் சந்தா கட்டணங்கள் ஆகியவற்றை செலுத்த வருகிற அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஆட்டோ டெபிட் அப்ளிகேஷனை பயன்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |