டெபிட்கார்டு மற்றும் கிரெடிட்கார்டு குறித்த ரிசர்வ் வங்கியின் புது விதிமுறைகள் அனைத்துமே அக்டோபர்மாதம் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரவேண்டும் என்று கார்டு நிறுவனங்களுக்கு மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருக்கிறது. முன்பாக இதுபற்றிய விதிகளை உருவாக்கிய இந்திய ரிசர்வ் வங்கி, கார்டு நிறுவனங்கள் அனைத்தும் விதிமுறைகளை ஜூலை 1ம் தேதிமுதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இருப்பினும் சில விதிமுறைகளை நடைமுறைபடுத்த கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று ரிசர்வ் வங்கியிடம் கார்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தது.
அதனை ஏற்ற ரிசர்வ் வங்கியானது விதிமுறைகளை நடைமுறைபடுத்துவதற்கான கடைசி தேதியை அக்டோபர் மாதம் முதல் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்தது. கிரெடிட் மற்றும்டெபிட் குறித்த ரிசர்வ் வங்கியினுடைய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் கார்டு டோக்கனை சேஷன் விதிகளானது கடந்த ஜூலை-1 ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைக் கருதி இந்திய ரிசர்வ் வங்கி சென்ற வருடம் டெபிட் மற்றும் கிரெடிட்கார்டு டோக்கனை சேஷன் விதிகளை வெளியிட்டது.
அந்த வகையில் ஆன்லைன் வணிகர்கள் வாடிக்கையாளர்களது கார்டுகளின் டேட்டாக்களை சேமிக்க இயலாது. இதனிடையில் அசல்கார்டுகளின் டேட்டாக்களை என்க் ரிப்ட் செய்த டிஜிட்டல் டோக்கனுடன் மாற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் சம்மதமின்றி நிறுவனங்கள் அவர்களுக்கு கிரெடிட் கார்டுகளை வழங்கவோ (அல்லது) கார்டுகளில் எவ்வித மாற்றத்தை செய்யக்கூடாது என ரிசர்வ்வங்கி அறிவுறுத்தி இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் புது விதிமுறைகளின் படி, டெபிட்கார்டு, கிரெடிட்கார்டு பயனர்கள் பயன்பெறுவார்கள்.
ஒரு வாடிக்கையாளரின் கிரெடிட்கார்டு 30 தினங்களுக்குள் ஆக்டிவேட் செய்யப்படவில்லை எனில், கார்டை ஆக்டிவேட் செய்வதற்கு முன்பு வாடிக்கையாளரிடம் ஓடிபி பாஸ்வேர்ட் வாயிலாக சம்மதம் பெறவேண்டும். ஏதேனும் காரணத்தால் 30 தினங்களுக்குள் ஆக்டிவேட் செய்யப்படாத கிரெடிட்கார்டை ஆக்டிவேட் செய்ய ஓடிபி பாஸ்வேர்ட் ஒப்புதல் வாடிக்கையாளரிடமிருந்து கிடைக்கவில்லை எனில் எந்தவொரு கூடுதல் கட்டணமும் வசூலிக்காமல் 7 நாட்களுக்குள் கிரெடிட்கார்டு கணக்கு மூடப்பட வேண்டும். வாடிக்கையாளரிடம் கூறப்பட்ட கிரெடிட்கார்டு உச்சவரம்பை, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் ஒப்புதல் இன்றி மாற்றக்கூடாது. இவ்விதிகள் அனைத்தையும் கார்டு நிறுவனங்கள் அக்டோபர் முதல் தேதியிலிருந்து நடைமுறைபடுத்த வேண்டுமென கார்டு நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கியானது உத்தரவு பிறப்பித்துள்ளது.