வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் டோக்கனைஷேசன் முறைக்கு வரவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் பயன்பாடு என்பது டோக்கனைஷேசன் முறையின்படிதான் இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. டெபிட் மற்றும் கிரேடிட் கார்டுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய டோக்கனைஷேசன் எனும் புதிய முறையினை அறிமுகப்படுத்துவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம், பொருட்கள் வாங்கும்போது கார்டு பற்றிய தகவலைக் கேட்டால் அதற்கு தற்காலிக மாற்று எண் உருவாக்கப்பட்டு பணப் பரிவர்த்தனை செய்யப்படும்.
இதனால் வாடிக்கையாளர்களுக்கு அதிக பாதுகாப்பு கிடைத்து அவர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படும். இந்த முறை உள்நாட்டு வணிகத்திற்கு மட்டுமே பொருந்தும். வெளிநாட்டு பணப்பரிவர்தனைக்கு பொருந்தாது. இந்த வசதியை பயன்படுத்துவது வாடிக்கையாளரின் தனிப்பட்ட விருப்பம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.