Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“டெய்லி ஒரு இலையை சாப்பிட்டு வாங்க போதும்”… பல நோய்கள் குணமாகும்… அடி முதல் நுனி வரை அனைத்துமே நன்மை..!!

கற்பூரவல்லி அடி முதல் நுனி வரை அனைத்துமே மருத்துவ பலன்களை கொண்டுள்ளது.

கற்பூரவள்ளி ஒரு மருத்துவ மிகுந்த மூலிகை. முந்தைய காலத்தில் குழந்தைகளுக்கு சளி இருமல் ஜலதோஷம் ஆகியவை ஏற்படும் பொழுது நமது முன்னோர்கள் இந்த கற்பூரவள்ளி இலை தான் சாரு எடுத்துக் கொடுப்பார்கள். இந்த சாறுடன் தேன் கலந்து சாப்பிடும்போது பல நோய்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து.

வியர்வை போக்கும், காய்ச்சலைத் தணிக்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது.

இதன் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும்.

இதன் இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட தலைவலி நீங்கும்.

இதன் இலை காம்புகளை குடிநீராக்கிக் கொடுக்க இருமல், சளி, காய்ச்சல் போகும்.

இலைகளை எடுத்து கழுவி சாறு எடுத்து 2 மில்லி சாறுடன் 8 மில்லி தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்புச்சளி நீங்கும்.

இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண கோளாறு காரணமாக ஏற்படக்கூடிய வாந்தியை போக்கக்கூடிய மருந்து .

இதன் இலையை அரைத்து கட்டிகள் இருக்கும் இடத்தில் கட்டு போட்டால் நல்ல பலன் தரும்.

மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் நல்ல மருந்தாக பயன்படுகிறது. சிறுநீரை எளிதில் வெளிக் கொணர கூடியது.

இந்த கற்பூரவள்ளி குழந்தைகளுக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில் இந்த இலையை பறித்து சுத்தமாக அலசி சிறிது நேரம் போட்டு எடுத்து விடுங்கள். இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி இருக்கும். லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும் .அந்த நீரை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் சளி தீரும்.

Categories

Tech |