Categories
சேலம் மாவட்ட செய்திகள்

டெய்லி நாங்க தான் சுத்தம் பண்றோம்…. மன உளைச்சலா இருக்கு சார்…. 8 ஆம் வகுப்பு மாணவன் அதிரடி….!!!!

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் சம்மந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் பள்ளி வகுப்பறையை தூய்மைப்படுத்த 3 மாணவர்கள தினந்தோறும் நிர்ப்பந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த மூன்று மாணவர்கள் மீதும் சுழற்சி அடிப்படையில் பள்ளியை கூட்டி சுத்தம் செய்ய வேண்டும் என்பது ஆசிரியன் உத்தரவு என்பதனால் மாணவர்கள் கால அட்டவணை போட்டு சுத்தப்படுத்தி வந்துள்ளனர்.

இதனை அடுத்து தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்ட எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தினந்தோறும் பள்ளிக்கு வந்தவுடன் வகுப்பறையை ஆசிரியர் சுத்தம் செய்ய சொல்கிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். மேலும் முறையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி எதுவும் இல்லை. இதனால் நாங்கள் திறந்த வெளியில் கழிப்பறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி வகுப்பறையில் தூய்மை செய்ய பணியாளர்கள் இருந்தும் எங்களை ஆசிரியர் செய்ய சொல்வதால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |