Categories
தேசிய செய்திகள்

டெய்லி நைட்… யாரோ என்னோட கழுத்த நெரித்தாங்க… – பிரபல பாலிவுட் நடிகை பகீர்…!!!

பிரபல பாலிவுட் நடிகையும், பாஜக எம்பி மன ஹேமமாலினி தினமும் இரவு யாரோ என் கழுத்தை நெரித்தது போன்று உணர்ந்தேன் என்று பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

தமிழில் இது சத்தியம் என சில படங்களில் நடித்தவர் நடிகை ஹேமமாலினி. இவர் ஒரு பாலிவுட் நடிகை. இவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். உத்தரபிரதேச மாநிலம் மதுரா மக்களவை உறுப்பினராக உள்ளார். தற்போது தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் சில நாட்கள் நான் பேய்களோடு வசித்து வந்தேன் என்று கூறியுள்ளார். ஸ்வப்னா சவுதாகர் என்ற படப்பிடிப்பிற்காக பாந்த்ராவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நாங்கள் தங்கியிருந்தோம். அந்த குடியிருப்பு மிக சிறியதாக இருந்ததால், அதன் பிறகு ஜூஹுவின் 7வது சாலையில் உள்ள ஒரு பங்களாவில் தங்கி இருந்தோம்.

அங்கு நான் எனது தன் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த போது ஒவ்வொரு நாளும் யாரோ இரவு என்னுடைய கழுத்தை நெரிப்பது போல் உணர்ந்தேன். ஒரு முறை அல்லது இரண்டு முறை நடந்து இருந்தால் இது என்னுடைய கற்பனை என்று விட்டிருக்கலாம். ஆனால் தொடர்ந்து பல நாட்கள் இதே போன்று உணர்தேன். அப்போதெல்லாம் ஒருவித அச்ச உணர்வுடன் நான் இருப்பேன். பிறகு அந்த வீட்டை காலி செய்து விட்டு சொந்தமாக தனி குடியிருப்பு ஒன்று வாங்கி அங்கு சென்று நாங்கள் வசித்தோம். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை தற்போது அவர் நினைவு கூர்ந்துள்ளார். இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

Categories

Tech |