கொச்சியில் டெலிகிராம் மூலமாக ஏடிஎம்ஏ போதை மருந்துகளை விற்ற திருநங்கை மாடல் பிடிபட்டுள்ளார் .
கொச்சி சேர்த்தலை அருகே உள்ள குத்தியதோடு பகுதியை சேர்ந்த தீக்ஷா என்பவர் தான் இந்த சம்பவத்தை செய்துள்ளார். அவரிடம் இருந்து எர்ணாகுளம் ரேஞ்ச் கலால் அதிகாரிகள் 8.5 கிராம் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, தீக்ஷா டெலிகிராம் குழுக்கள் மூலம் போதைப்பொருட்களை விற்றார். திருநங்கைகளுக்கு போதைப் பொருள் சப்ளை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கொச்சி சிட்டி மெட்ரோ ஷேடோ குழுவினர் புதன்கிழமை அவரை வாழகலாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பிடித்தனர்.
வாடிக்கையாளர்களை சந்திக்கவும், போதைப் பொருள் விற்பனை செய்யவும் பல்வேறு ஓட்டல்களில் தங்கி வந்ததும் தெரியவந்தது. ஒரு கிராம் ரூ.2,000க்கு எம்.டி.எம்.ஏ-வை வாங்கி, வாடிக்கையாளர்களுக்கு ரூ.4,000 முதல் ரூ.7,000 வரை விலைக்கு விற்றார். இதனை தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.