பொருட்களை திருடிய மர்மநபர் ஒருவருக்கு பதிலடி கொடுத்த பெண் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
கனடாவிலுள்ள Hamilton என்ற நகரில் உள்ள வீடுகளில் ஆர்டர் செய்யப்படும் பொருட்கள் டெலிவரி ஆன பின்பு திருடுவதையே வேலையாக கொண்டுள்ளார் மர்ம நபர் ஒருவர். இந்நிலையில் Hamilton நகரில் வசித்து வரும் Lauri bringle (54) மற்றும் அவரது வீட்டின்அருகில் வசிப்பவர்கள், நிறைய பொருட்களை திருடு கொடுத்துள்ளார்கள். இதனால் சலிப்படைந்த அவர்கள் ஒரு திட்டம் தீட்டினர்.
அதாவது ஒரு டெலிவரி செய்யப்படும் பெட்டியில் பூனை கழிவுகளை போட்டு அதன்மீது அமேசான் நிறுவனத்தின் லோகோவை ஒட்டியுள்ளனர். பின் அந்த பெட்டியை Lauri யின் வீட்டு வாசல் முன் வைத்துவிட்டு காத்திருந்தனர். அப்போது சுமார் 40 நிமிடங்கள் கழித்து அந்த மர்ம நபர் வந்துள்ளார் யாருக்கும் தெரியாமல் வழக்கம்போல மெதுவாக பெட்டியை எடுத்து சென்றுள்ளார்.
இதனை Lauri வீட்டின் முன் பொருத்தப்பட்டுள்ள கேமரா பதிவு செய்துள்ளது. இந்த மர்ம நபருக்கு சரியான பதிலடி கொடுத்த Lauri மற்றும் அருகில் வசிப்பவர்கள் உற்சாகத்தில் பார்ட்டி ஒன்று வைத்திருக்கிறார்கள். ஆனால் Lauri இதுகுறித்து காவல்துறையினருக்கு புகார் அளிக்கவில்லை. மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, காவல்துறையினர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இதனால் நிறைய பேர் சலிப்படைந்து இருப்பார்கள் என்பதையே இச்சம்பவம் குறிக்கிறது என்று கூறியுள்ளார்.
இதனால் பலரும் Lauri யை பாராட்டி வருகிறார்கள். எனினும் காவல்துறையினர் வேறு யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கூறியுள்ளார்கள். ஆனால் Lauri பல பொருட்களை பறிகொடுத்துள்ளதால் காவல்துறையின் இந்த அறிவுரையை கேட்கவில்லை. மேலும் இவ்வாறு செய்வதற்காக பூனையின் கழிவுகளை சேகரித்து வருவதாக கூறியுள்ளார்.