நம் நாட்டின் பிரபல உணவு டெலிவரி நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஒருவர் பிற டெலிவரி ஊழியர்களைப் போன்று அவரும் வாடிக்கையாளர்களுக்கு உணவை டெலிவரி செய்வதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார். இதனை வேலைவாய்ப்புக்கான Naukri.Com நிறுவனத்தை நடத்தும் info Edge-ன் நிறுவனர் சஞ்சீவ் பிக்சந்தனி டுவிட்டரில் பதிவிட்டு தனது ஆச்சரியத்தை பகிர்ந்துள்ளார். அவற்றில், சொமேட்டோ நிறுவனத்தின் சி.இ.ஓ தீபேந்தர் கோயல் மற்றும் சொமேட்டோ நிறுவன குழுவினரை சந்திக்க நேர்ந்தது.
அப்போது தீபேந்தர் உட்பட அனைத்து மூத்த அதிகாரிகளும் சொமேட்டோ சீருடை அணிந்து வாடிக்கையாளர்களுக்கு அவர்களாகவே தங்களுடைய இருசக்கர வாகனத்தில் சென்று உணவு டெலிவரி செய்வது பற்றி அறிந்தது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. இதுவரையிலும் தங்களை எவருமே அடையாளம் கண்டதில்லை என்று தீபேந்தர் என்னிடம் தெரிவித்தார். 3 மாதங்களுக்கு ஒருமுறை என சென்ற 3 வருடங்களாக தீபேந்தர் உள்ளிட்ட சொமேட்டோ குழுவினர் இதனை செயல்படுத்தி வருகிறார்கள் என்று சஞ்சீவ் குறிப்பிட்டுள்ளார்.