லண்டனை சேர்ந்த கைப்பத்தி (28) என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் வருடம் தனது படிப்பை முடித்துவிட்டு அமேசானில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தார். அதில் அவருக்கு பெரிதாக வருமானம் இல்லாத நிலையில் வாழ்க்கை இப்படியே போய் விடுமோ என நினைத்து கவலை பட்டுள்ளார். அப்போது தான் சேமித்து வைத்திருந்த 66 ஆயிரம் பணத்தை வைத்து கிரிப்டோ கரன்சியல் முதலீடு செய்துள்ளார். இந்த நிலையில் அவர் வாங்கிய காயின் விலை ஏற்றத்தை கண்ட நிலையில் ரூபாய் 28 லட்சம் வரை பணத்தை ஈட்டியுள்ளார்.
இதன் பின் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். இதனை தொடர்ந்து கைப்புக்கு கிரிப்டோவில் வருமானம் அதிகரிக்க தொடங்கிய நிலையில் ஒரு காலகட்டத்தில் ஐந்து கோடி ரூபாய்க்கும் மேலே கிடைத்துள்ளது. இதனை அடுத்து தற்போது கைப்பு துபாய்க்கு குடிபெயர்ந்து இருக்கின்றார். தனது கனவு வாழ்க்கையை அங்கு வாழும் அவர் ரெண்டு கோடி ரூபாய்க்கு புதிய கார் வாங்கி இருக்கிறார். இது பற்றி அவர் பேசும்போது நான் என் வேலையை ராஜினாமா செய்ய முடிவை முதலில் என் பெற்றோர் ஏற்கவில்லை. அதனால் நான் சாதித்து காட்டினேன். ஆனால் இப்பொழுது நான் இளம் வயதிலே இவ்வளவு சாதித்து இருக்கிறேன் என பெற்றோர் பெருமிதம் கொள்கின்றனர் என தெரிவித்துள்ளார்.