இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடல் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது.
சூலூரில் இருந்து முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களும் விமானப்படைக்கு சொந்தமான c-130j சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிபின் ராவத் உள்ளிட்டோரின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்த உள்ளார். நாளை காலை 12 மணிவரை பிபின் ராவத் உள்ளிட்டோரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் நாளை மாலை இறுதி சடங்குகள் நடைபெற்று நல்லடக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.