Categories
தேசிய செய்திகள்

டெல்லிக்கு வந்த புதியவகை கொரோனா… மக்கள் மத்தியில் மரண பயம்…!!!

லண்டனில் இருந்து நேற்று டெல்லிக்கு வந்த விமான பயணிகளிடம் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதனால் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவருக்கும் பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இங்கிலாந்தில் அதிகரித்து வரும் மரபணு மாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ், நேற்று இரவு லண்டனில் இருந்து டெல்லிக்கு வந்த விமான பயணிகளிடமும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட சோதனை செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே டெல்லியில் கொரோணா பரவல் அதிகம் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சென்னை தொடர்ந்து டெல்லி என்பதால் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

Categories

Tech |