திருச்செந்தூர் அரசியல் முகாம்களில் பல்வேறு மாற்றங்கள் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தி.மு.க அரசு பாஜக கட்சிக்கு எதிரான எதிர்க் கட்சிகளை ஒன்று திரட்டும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அதாவது சமூக நீதிக்கான கூட்டமைப்பு, பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வருதல், தென்னிந்திய முதலமைச்சர்கள் கூட்டமைப்பு என பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரை தமிழகத்திற்கு வரவழைத்தது, டெல்லிக்கு சென்ற தமிழக முதல்வர் முக்கிய அரசியல் புள்ளிகளை சந்தித்தது, தென்னிந்திய முதல்வர்களை ஒரு அணியில் சேர கோரிக்கை வைத்தது போன்ற பல்வேறு விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார்.
இதுகுறித்து பாஜக அரசு அறிந்தாலும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. இந்நிலையில் டெல்லி அமலாக்கத்துறை திமுக அமைச்சர்களை குறிவைத்து வருவாய் வரித்துறை சோதனை நடத்த இருப்பதாக டெல்லி வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த லிஸ்டில் குறிப்பாக செந்தில் பாலாஜியும், அனிதா ராதாகிருஷ்ணன் முதலிடத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதில் இருந்து செந்தில் பாலாஜி தப்பிப்பதற்கான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அனிதா ராதாகிருஷ்ணன் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் தன்னுடைய மகனை அரசியல் கூட்டங்களில் தலைகாட்ட வைத்துள்ளார்.
இந்நிலையில் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களை கனிமொழி எம்பி கவனித்து வருகிறார். தூத்துக்குடி மாவட்ட அமைச்சர்களான அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோர் கனிமொழிக்கு நெருங்கிய ஆதரவாளர்களாகவே காட்டிக் கொள்கின்றனர். தூத்துக்குடி மேயர் பதவி கீதா ஜீவனின் சகோதரருக்கு கிடைத்ததற்கு முக்கிய காரணம் கனிமொழி எம்.பிதான் எனவும் கூறி வருகின்றனர். இந்நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் தன்னுடைய மகனுக்கு கட்சியில் முக்கிய பதவியை வாங்கிக் கொடுப்பதற்காக உதயநிதி ஸ்டாலினை அணுகியுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. மேலும் கனிமொழியும், உதயநிதி ஸ்டாலினும் சிரித்து பேசிக்கொண்டாளும் கட்சிக்குள் பனிப்போர் நிலவி வருகிறது. அனிதா ராதாகிருஷ்ணன் தன்னைக் காத்துக் கொள்வதற்காக முகாம் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.