Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு… எல்லையில் பரிசோதனை கட்டாயம்…!!!

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் உத்திர பிரதேச எல்லையில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ளது. அதனால் தினமும் கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன் எதிரொலியாக டெல்லியில் எல்லைப்பகுதியில் கொரோனா பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. டெல்லி மற்றும் நொய்டா எல்லையில் கொரோனா பரிசோதனை என்ற முறையில் செய்யப்படுகின்றது. இதுபற்றி கௌதம புத்தா நகர் ஆட்சியர் கூறுகையில், “கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லைப்பகுதியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநில எல்லைப் பகுதிகள் திறக்கப்பட்டுள்ளன. அதற்கு எந்த ஒரு கட்டுப்பாடுகளும் தற்போது கிடையாது. அதனால் எல்லைப் பகுதிகளை கடந்து வருகின்ற மக்களுக்கு கோரோனோ பரிசோதனை செய்வதற்கு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பரிசோதனை முகாம்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |