Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!!

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 14வது கூட்டம் டெல்லியில் இன்று மாலை 3 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா மாநிலங்கள் கலந்து கொள்கின்றன. தமிழக பொதுப்பணித் துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்கின்றனர்.

ஆணைய தலைவர் எஸ்.ஏ ஹல்தர்  தலைமையில் நடக்கும் கூட்டத்தில் காவிரி நீர், மேகதாது அணை பற்றி விவாதம் நடைபெற உள்ளது. நிலுவையில் உள்ள 28.7 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடக தர தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |