Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று முதல் தொடங்குகிறது…. ராணுவ உயர் அதிகாரிகளின் 5 நாள் மாநாடு….!!!!

ராணுவ உயர் அதிகாரிகளின் மாநாடு ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறுவது வழக்கம் . அந்த வகையில் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் இவை நடைபெறுகின்றது.  பாதுகாப்புத்துறை இராணுவ விவகாரங்கள் துறை ஆகியவற்றின் உயர் அதிகாரிகளுடன் ராணுவ அதிகாரிகள் ஆலோசனை நடத்த இது ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ராணுவ உயர் அதிகாரிகளின் மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது. 22ஆம் தேதி வரை இந்த மாநாடு இருக்கும்.

ராணுவ தளபதி  எம்.எம்.நரவானே தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகின்றது. அவர் இந்த மாதம் ஓய்வு பெறுவதால், அவர்கள் பங்கேற்கும் கடைசி மாநாடு இதுவாகும். இந்த மாநாட்டில் காஷ்மீரின் நிலவரம், ரஷ்யா உக்ரைன் போர் குறித்தும், போர் நமது பிராந்தியத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து பேசப்படுகிறது. சீனா பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லைகளில் நாட்டின் பாதுகாப்புக்கான ஆய்வு குறித்து பேசப்படுகின்றது. மின்சார வாகனங்கள் வாங்குவது உள்ளிட்ட நவீனமயமாக்கல் நடவடிக்கை பற்றியும் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |