பொதுமுடக்க காலத்தில் காங்கிரஸ் சார்பில் 1கோடி ரூபாய் கொடுத்தும் யாரும் வாங்கவில்லை என கே.எஸ் அழகிரி வேதனைப்பட்டார்.
இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரியிடம், காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு நடந்தது. ஆனால் மிகவும் வாக்குப்பதிவு குறைவாக இருக்கிறது 584, 184 தான் வாக்கு பதிவு ஆகி இருக்கிறது, இதை எப்படி பார்க்கிறீர்கள் மக்களிடம் விழிப்புணர்வு இல்லை என்று நினைக்கிறீர்களா என்று கேட்டபோது,
விழிப்புணர்வு இல்லாமல் இருக்காது, அவ்வளவு பேர் தான் ஊரில் இருந்து இருப்பாங்க. வாக்குகளைக் கொண்டு சேர்ப்பது என்பது வந்து பெரிய வேகம் இருக்குபோது சேர்த்து விடுவார்கள். இல்லாத பொது வெளியூர் சென்று இருப்பார்கள் என தெரிவித்தார்.
சென்னையில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்கிறார்கள். ஆனால் அங்கு சரியான ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகம் செய்யவில்லை. ஏற்கனவே இதைப்போல் செய்தார்கள். நடந்து சென்றார்கள் மறுபடியும் அவர்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்குமா ? அதற்கான நிதியை காங்கிரஸ் வழங்குமா என்று கேட்டபோது,
இதில் அரசு மிகுந்த முன்னெச்சரிக்கையோடு செயல்படனும். இது சாதாரண விஷயமல்ல. நாங்கள் போன முறை ஒரு கோடி ரூபாய் தமிழக காங்கிரஸ் சார்பாக கொடுத்தோம், ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அவர்களுக்கு என்ன சிரமம். முதன் முதலில் இந்தியாவில் நாங்கள் தான் அறிவித்தோம். எங்களுடைய செயற்குழுவில் அன்னை சோனியா காந்தி அவர்கள் இதேமாதிரி தரவேண்டும் என்று சொன்னதும், அன்றைக்கு அடுத்த நிமிடம் நாங்கள் கொடுத்தோம்.
எனக்கு டெல்லியிலிருந்து தலைவர் பா சிதம்பரம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, இதே மாதிரி அம்மா சொல்லியிருக்கிறார், முதலில் நீங்கள் கொடுங்கள் என்று சொன்னார் , உடனே நாங்கள் கொடுத்தோம். ஆனால் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழக காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானில் இருந்தா ? உங்களுக்கு பணம் கொடுக்கிறது. நம்முடைய காங்கிரஸ் தோழர்களின் பணத்தை எடுத்து உங்களுக்கு கொடுக்கிறோம். இப்பவும் அதை செய்யணும். வெளிமாநில தொழிலாளர்கள் ரயில் மூலம் போகிறார்கள் என்றால் என்று சொன்னால் உடனே மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.