Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் உயிரிழந்த காவலர் ரத்தன்லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி – முதல்வர் கெஜ்ரிவால்!

டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த காவலர் ரத்தன் லால் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிந்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர்.

கோகுல்புரி பகுதியில் கல்வீச்சு சம்பவத்தில் படுகாயமடைந்த தலைமைக்காவலர் ரத்தன் லால் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்று உயிரிழந்துவிட்டார். உயிரிழந்த காவலர் ரத்தன் லால் உடலுக்கு நேற்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலயில் உயிரிழந்த காவலர் ரத்தன் லால் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.

மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , உயிரிழந்த காவலர் ரத்தன் லால் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என கூறியுள்ளார். கலவரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசி வரும் கெஜ்ரிவால், ரத்தன் லால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

டெல்லி கலவரத்திற்கு வெளி ஆட்களே காரணம் என்றும் அரசியல் காரணங்களுக்காக டெல்லி தவறாக வழி நடத்தப்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த வன்முறையால் இந்து முஸ்லிம்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி மக்கள் அமைதியை விரும்புகின்றனர், வெறுப்பை புறக்கணிக்க வேண்டிய நேரமிது எனவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |