டெல்லியில் உள்ள அரசு பள்ளியை பார்வையிட சென்ற மெலனியா ட்ரம்ப்பிற்கு ஆரத்தி எடுத்து பள்ளிக்குழந்தைகள் வரவேற்பு அளித்தனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றனர். அதிபர் டிரம்ப்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் டிரம்ப். பின்னர் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை தந்தார்.
அங்குள்ள காந்தி நினைவிடத்திற்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய ட்ரம்ப் அதனை தொடர்ந்து, மரக்கன்று நட்டார். காந்தியடிகள் நினைவிடத்தில் குறிப்பெழுதிய ட்ரம்ப்புக்கு நினைவு பரிசாக காந்தி சிலை வழங்கப்பட்டது. டெல்லியில் உள்ள அரசு பள்ளியை மெலனியா ட்ரம்ப் பார்வையிட சென்றார். அவருக்கு ஆரத்தி எடுத்து பள்ளிக்குழந்தைகள் வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் முறையை நேரில் பார்வையிட்டு ரசித்த மெலனியா ட்ரம்ப்.