டெல்லியில் உள்ள ரோகிணி நீதிமன்றத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் அனைத்து ஆவணமும் எரிந்து சாம்பலாகியுள்ளது.
டெல்லியில் உள்ள ரோகிணி நீதிமன்றத்தின் மூன்றாவது தளத்தில் இன்று காலையில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து ஏறத்தாழ 8க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். குறிப்பாக இந்த தீவிபத்தில் மூன்றாவது மாடியில் இருந்த அனைத்து பதிவுகளும், நீதிமன்ற கோப்புகள், பல்வேறு விதமான ஆவணங்கள் முழுமையாக தீயில் எரிந்து சாம்பலாகி உள்ளன.
தற்போது காணொலிக் காட்சி மூலமாக நீதிமன்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால் இந்த தீ விபத்துக்கான காரணமாக அந்த தளத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஆவணங்களும் முழுமையாக எரிந்து சாம்பலாகி விட்டது. தீ விபத்துக்கு தற்போது காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தீயணைப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.