நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், அப்போது டெல்லி அரசு அங்குள்ள மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் பொருட்களை வீட்டிற்கே டெலிவரி செய்யும் திட்டத்தை அமல்படுத்தி இருந்தது.
இந்நிலையில் மத்திய அரசு இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தியது. இதற்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, கெஜ்ரிவால் யாருக்கு ரேஷன் வழங்குகிறார் என்று தெரியாது? அந்த பொருள்கள் வெளிச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படலாம். அது நடைபெறாமல் மத்திய அரசு தடுத்து உள்ளது என்று தெரிவித்துள்ளார்.