டெல்லியில் இன்று அதிகாலையில் பிரபல ரவுடிகள் இரண்டு பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
டெல்லியின் தென்கிழக்கு பகுதியான பிரகலாத்பூர் பகுதியில் இன்று காலை 5 மணியளவில் நடத்தப்பட்ட என்கவுண்டரில் ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் என்ற இரண்டு ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லியின் காவல் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் என்று காவல்துறை அதிகாரிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது கொலை, கொள்ளை என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. காவல்துறையினர் இவர்களை வெகு நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் அவர்கள் பிரகலாத்பூர் பகுதியில் இருப்பது குறித்து தகவல் அறிந்து அவர்களை பிடிக்க சென்றுள்ளனர். அவர்களை கண்டறிந்து பின் தொடர்ந்து சென்ற போது வாகனத்தை மடக்கி பிடித்து சரணடையுமாறு கேட்டுள்ளனர்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த குற்றவாளிகள் காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டு தப்ப முயன்றனர். இதனையடுத்து தற்காப்பிற்காக காவல் துறை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் குண்டு துளைத்த நிலையில் 2 குற்றவாளிகளும் பலத்த காயத்துடன் கீழே விழுந்தனர். இதையடுத்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், பரிசோதித்த மருத்துவர்கள் குற்றவாளிகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் இருதரப்பினரும் சுமார் 30 முறைக்கு மேல் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.