Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசம்… பொதுமக்கள் கடும் சிரமம்…!!!!!

டெல்லியில் காற்றின் மாசுபாடு அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. அதையும் மீறி வெடித்தால் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதையும் மீறி பலர் பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகை கொண்டாடியதால் தீபாவளி நாளில் உலகிலேயே மிகவும் மாசுப்பட்ட நகரமாக டெல்லி மாறி உள்ளது. இந்த சூழலில் கடந்த சில தினங்களாகவே தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள ncr பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்து மோசம் அடைந்து கொண்டிருக்கிறது.

இதனால் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 364 என்று அளவில் பதிவாகி இருக்கிறது. அதாவது டெல்லி முழுவதும் காற்றின் தரம் தொடர்ந்து மிகவும் மோசம் என்ற நிலையில் இருந்து வருகிறது. இதனை அடுத்து டெல்லி விமான நிலைய பகுதியில் காற்றின் தர குறியீடு 333 பதிவாகி இருக்கிறது. நொய்டாவில் 393 ஆகவும் பதிவாகி இருக்கிறது.

இதனால் அந்த பகுதிகளில் காற்றின் தர குறியீடு மிகவும் மோசம் என்ற நிலையை எட்டியுள்ளது. குரு கிராமில் 318 ஆக பதிவாகி மிகவும் மோசம் என்ற நிலை நீடித்து வருகிறது இந்த சூழலில் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள ncr பகுதிகளில் பணிமூட்டம் மூடியது போல காற்று மாசு காரணமாக தூசி நிறைந்து காணப்படுகிறது. காற்று மாசு காரணமாக பனிமூட்ட மூடியது போல் காணப்படும் சாலைகளினால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு அழகியுள்ளனர். இதன் காரணமாக சாலைகளில் நடை பயிற்சி மேற்கொள்பவர்கள், சைக்கிள் பயிற்சி மேற்கொள்வர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். மாசு நிறைந்த காற்றை சுவாசிக்க வேண்டிய சூழல் உருவாகி இருப்பதாக கவலை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |