டெல்லியில் கொரோனா பாதிப்பிலிருந்து 90% பேர் குணமடைந்துள்ளதாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.
டெல்லியில் சில நாட்களாக அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை தடுப்பதற்கு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 14,07,743 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனா பாதிக்கப்பட்டு 11,998 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவால் தற்போதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,330 ஆக இருக்கின்றது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ” டெல்லியில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 90 சதவீதமாக இருக்கின்றது. அதனை எதிர்கொள்வதற்கு நாங்கள் முழு அளவில் தயாராக இருக்கிறோம். அடுத்து வருகின்ற நாட்களில் கொரோனா பரிசோதனைக்கான எண்ணிக்கை இரட்டிப்பாகும். அதற்கான உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.