லாரி மோதி 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள சீமாபுரி பகுதியில் நேற்று இரவு சாலையின் நடுவில் உள்ள சாலை பிரிப்பானில் சிலர் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அதிகாலை 1. 55 மணியளவில் அவ்வழியாக வந்த லாரி நிலை தடுமாறி தூங்கிக் கொண்டிருந்தவர்களின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயம் அடைந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் காயம் அடைந்த 2 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் லாரி ஓட்டுநர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஷாம்லி நகரில் இருப்பது தெரிய வந்தது. பின்னர் அங்கு சென்று லாரி ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.