Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் டிராக்டர் எரிப்பு… கொடூர போராட்டத்தில் இறங்கிய பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ்…!!!

டெல்லியில் பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் சார்பாக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது டிராக்டர் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

மத்திய அரசு நிறைவேற்றி இருக்கின்ற வேளாண் மசோதாக்களை கண்டித்து விவசாயிகள் மற்றும் எதிர் கட்சியினர் அனைவரும் நாடு முழுவதும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் விவசாய அமைப்புகள் நடத்தும் ரயில் மறியல் போராட்டம் நீடித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும், அதற்கு துணை நிற்கும் அதிமுக அரசை கண்டிக்கும் வகையிலும் தமிழகத்தில் இன்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் டெல்லியின் மையப் பகுதியாக உள்ள இந்தியா கேட் அருகே பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அச்சமயத்தில் டிராக்டர் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. மினி லாரியில் ஏற்றி வந்த அந்த டிராக்டரை சாலையின் நடுவே தள்ளி திடீரென தீ வைத்து எரித்தனர். அந்த காட்சி ஃபேஸ்புக் மூலமாக நேரலை செய்யப்பட்டது. அதன்பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் பயணம் செய்த கார் ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சியின் நாடகம் என்றும்,அதனால்தான் மக்கள் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு வாக்களித்தனர் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியிருக்கிறார்.

 

Categories

Tech |