டெல்லியில் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளும் திறக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் தற்போது 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 50 சதவீத மாணவர்களுக்கு மேல் நேரடி வகுப்பில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை என்றும், ஒரே நேரத்தில் ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பள்ளி நிர்வாகம் தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.