டெல்லியில் தொற்று வெகுவாக குறைந்த காரணத்தினால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நாளை முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படுகிறது. அனைத்து மாணவர்களும் நேரடியாகப் பள்ளிக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில பள்ளிகள் மட்டுமே தீபாவளி பண்டிகைக்கு பிறகு பள்ளிகள் திறப்பதாக அறிவித்துள்ளது. நவம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.
மேலும் வகுப்பறையில் 50% மாணவர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது. மாணவர்களை பள்ளிக்கு வரும்படி கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு வழங்குவதற்கு சனிடைசர், வெப்பநிலை பரிசோதனை செய்யும் கருவி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.