டெல்லியில் நிலைமை மோசமடைந்துள்ளது மத்திய அரசுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை மிக மோசமாக உள்ளது. தயவு செய்து வேண்டி ஆக்சிஜனை உடனடியாக வழங்குங்கள் என மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் உள்ள முக்கியமான மருத்துவமனைகளில் இன்னும் 6 முதல் 12 மணி நேரங்களுக்கு மட்டுமே ஆக்ஸிஜன் உள்ளது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன் இருப்பு கையில் இல்லை என்பதால் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.