Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் நீடிக்கும் காற்று மாசு – வாகன ஓட்டிகள் பாதிப்பு

தலைநகர் டெல்லியில் நிலவும் கடும் குளிருக்கு மத்தியில் இன்றும் காற்று மாசு நீடித்தது. பல இடங்களில் மாசு அடர்ந்த காணப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

கடந்த சில வருடங்களாகவே டெல்லி கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ஆளாகி வருகிறது. கொரோனா ஊரடங்கின் போது வெகுவாக குறைந்த காற்று மாசு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த வாரம் முதல் மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று போல் இன்றும் அதிகாலை முதலே காற்றின் தரம் மோசமான நிலையில் இருந்தது. ஆனந்விகார், அக்ரதம் ஆகிய இடங்களில் நிலைமை மோசமாக இருந்தது.

அங்கு தரக் குறியீடு எண் 472 என்ற அளவில் இருந்ததால் குறிப்பிட்ட தூரம் வரை எதிரே உள்ள பொருட்கள் கண்ணுக்கு புலப்படாமல் போனது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி சாலையில் நடந்து செல்வோரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Categories

Tech |