Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது.

சீனா உள்பட உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3000ஐ கடந்துள்ளது. சீனாவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை உயிர் பலி இல்லாதபோதிலும் 6 பேருக்கு கொரானா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று பேசிய பிரதமர் மோடி, கொரோனோ வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படாமல் இருக்குமாறு அருவுறுத்தினார்.

இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது. கூட்டத்தில் கொரோனோ தடுப்பு மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்க உள்ளனர். மேலும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் நடந்த வன்முறை குறித்தும் ஆலோசிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |