டெல்லியில் ஒரே நாளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
டெல்லியில் முதலில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த நிலையில் பொது சுகாதாரத் துறையில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் இன்று மட்டும் 8,593 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,59,975 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை கொரோனா பாதிப்பால் உயிர் இழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,228 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் இன்று மட்டும் 7,264 பேர் கொரோனா பாதிப்பு இருந்தது குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் தற்போது வரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,10,118 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது வரை 42,629 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.