Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை… இந்திய வானிலை ஆய்வு மையம்..!!!

டெல்லியில் அடுத்து வருகின்ற மூன்று நாட்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்மேற்கு பருவமழை சில நாட்களாக தீவிரமடைந்துள்ளதால், குஜராத், அசாம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் அடுத்த மூன்று நாட்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், ” தலைநகர் டெல்லி மற்றும் அதனை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, அம்மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்களில் மிதமானது முதல் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

அதனால் அங்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கனமழை காரணமாக டெல்லியில் தாழ்வான பகுதியில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 26 முதல் 28 ஆம் தேதி வரையில் டெல்லி உள்பட வட மேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது” என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |