Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம்…. அனுராக் தாகூர் கூறிய தகவல்….!!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் செய்தியாளரிடம் கூறினார். அதில் “எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் எம்.பிக்.களின் தொகுதி மேம்பாட்டு செலவிற்காக மீண்டும் நிதி வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது .

அதன்படி இந்த ஆண்டில் மீதமுள்ள மாதங்கள் செலவுகளுக்கு ஒரே தவணையாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படும். அதுமட்டுமில்லாமல் அடுத்த நிதியாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டிற்கும் ரூ.5 கோடி என்று இரண்டு தவணையாக நிதி ஒதுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |