Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் 3 லட்சத்தை எட்டும் கொரோனா பாதிப்பு…. நடுநடுங்கும் மக்கள்…!!!

டெல்லியில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடக்கும் நிலையில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

டெல்லியில் கடந்த ஒரு மாதங்களாக கொரோனாவின் பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மற்றும் சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் இன்று ஒரே நாளில் மட்டும் 3,037 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,82,752 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் 40 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து தற்போது வரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,401 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3,167 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதன் மூலம் தற்போது வரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2,50,613 ஆக உயர்ந்துள்ளது. மேலும் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 26,738 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்”என்று டெல்லி சுகாதார துறை கூறியுள்ளது.

Categories

Tech |