டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடந்துள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
டெல்லியில் கொரோனா பாதிப்பு விவரம் குறித்த தகவலை டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது. அதில், டெல்லியில் இன்று ஒரே நாளில் மட்டும் 2,866 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,06,559 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 48 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, கொரோனாவால் தற்போது வரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,740 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் இன்று மட்டும் 2,766 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் தற்போது வரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி அவர்களின் மொத்த எண்ணிக்கை 2,78,812 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 22,007 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது.