டெல்லியில் இன்று 468 மது கடைகள் மூடப்பட்டுள்ளதால் மதுபிரியர்கள் பெரும் அவுதி அடைந்துள்ளனர் .
டெல்லியில் 864க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் டெல்லி மாநில தொழில் துறை, உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம், டெல்லி மாநில சிவில் சர்ப்ரைஸ் கார்ப்பரேஷன் உள்ளிட்ட 4 அமைப்புகள் மூலமாக மது விற்பனை கடைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதேபோல் தனியார் அமைப்புகளும் கடைகளை நடத்தி வருகின்றனர் . இதில் 475 மதுபான கடைகளின் உரிமம் நேற்றுடன் காலாவதியாகியுள்ளது. காலால் துறையில் புதிய நடைமுறைகளையும், கொள்கைகளையும் அமல்படுத்துவதற்கு டெல்லி அரசு முயற்சி மேற்கொண்டது.
இதனால் டெல்லியில் செயல்பட்டு வந்த 475 மதுபான கடைகளில் சுமார் 468 கடைகளை இன்று திறக்கவில்லை. மது கடைகளின் உரிமம் காலாவதி ஆவதை தொடர்ந்து இந்த கடைகளில் ஏற்கனவே மதுபான கொள்முதல் குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் இக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் தலைநகர் டெல்லியில் மதுபானங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே டெல்லி காலால் துறை மந்திரியும், துணை முதல்வருமான மனிஷ் சிசோடியா டெல்லியில் சட்டவிரோத மதுபானம் விற்பனையை கண்காணிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.