Categories
தேசிய செய்திகள்

டெல்லியை உலுக்கிய கூட்டு பாலியல் வன்கொடுமை…”சிறுமியின் பெற்றோருக்கு ராகுல்காந்தி ஆறுதல்”….!!!

டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு ராகுல்காந்தி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

டெல்லி கான்கட் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் சுடுகாட்டுக்கு அருகில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு சென்று குடிநீர் எடுக்கச் சென்றுள்ளார். அவர் வெகு நேரமாகியும் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை தேடி சென்றுள்ளனர். இரவு ஏழு முப்பது மணிக்கு சுடுகாட்டில் சென்று தேடியபோது அங்கிருந்த பாதிரியார் ராதே ஸ்யாம்(45) மற்றும் தகன மேடை ஊழியர்கள் லட்சுமி நாராயணன், சலீம், குல்தீப் ஆகியோர், உங்கள் மகள் தண்ணீர் பிடிக்க வந்தார். தண்ணீர் தொட்டியில் இருந்த மின் வயரை தொட்ட காரணத்தினால் மின்சாரம் தாக்கி உயிரிழந்து விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மகளை பார்த்த அவரது தாய் கட்டியணைத்து கதறி அழுதார். பின்னர் பாதிரியார் போலீசிடம் சென்றால் பிரேத பரிசோதனை செய்வதாக கூறி உங்கள் மகளின் உடலை வெட்டி உறுப்புகளை திருடி விடுவார்கள் என்று கூறி, சுடுகாட்டில் கட்டாயப்படுத்தி உடலை எரிக்க வைத்துள்ளார். பின்னர் வீடு திரும்பிய தாயிக்கு சிறுமியின் மணிக்கட்டில் இருந்த காயம் , உதடுகள் நீலநிறமாக இருந்ததை பார்த்து சந்தேகம் எழுந்தது. பின்னர் காவல் துறைக்கு சென்று இது சம்பந்தமாக புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் சுடுகாட்டிற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பாதி எரிந்த நிலையில் இருந்த சிறுமியின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்தபோது, அவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

பின்னர் போலீசார் பாதிரியாரிடம் விசாரணை செய்ததில் சுடுகாட்டில் வேலை பார்த்தவர் உடன் சேர்த்து மூன்று பேர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சம்பவம் நடந்த சுடுகாட்டுக்கு வெளியே நூற்றுக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடி, நீதி கோரி போராட்டம் நடத்தினர். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே குற்றவாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்து நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு ராகுல்காந்தி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு ராகுல்காந்தி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |