இந்திய தலைநகரமான டெல்லியில் காற்றின் மாசு தரம் கடந்த சில நாட்களாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதற்கு டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள் கழிவு பயிர்களை எரிப்பது மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை ஆகியவை காரணமாக கூறப்படுகிறது. இதனால் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மும்பையில் டெல்லியை விட காற்றின் தரம் மோசமான நிலையை அடைந்து உள்ளது. இதற்கு அளவில்லாத கட்டுமான பணிகள் மற்றும் மாநகரில் ஏற்படும் வளர்ச்சி பணிகள், மெட்ரோ ரயில் தடம் கட்டுமானம், எண்ணெய் மற்றும் வாயு சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வெளிவரும் மாசு போன்றவையும் காற்று மாசு ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
இதையடுத்து மும்பையில் உள்ள கொலாபா பகுதியில் காற்றின் தரம் 305 மற்றும் தெற்கு மும்பை பகுதியில் காற்றின் தரம் 300க்கு மேல் பதிவாகியுள்ளது. இது டெல்லியை விட மிக மோசமான நிலையில் உள்ளது. மேலும் ஐஐடி மும்பையின் ஆய்வின்படி, மும்பையின் முக்கிய பகுதிகளான நரிமான் பாயிண்ட், மாஸ்கான் வளாகம் மற்றும் கர்லா வளாகம் போன்ற இடங்களில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது.